» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி மோடிக்கு தூக்கமற்ற இரவுகளை உருவாக்கும்: மாயாவதி

சனி 12, ஜனவரி 2019 1:04:51 PM (IST)




சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளை உருவாக்கும் என மாயாவதி கூறியுள்ளார்.

தற்போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் கூட்டாக செய்தியாளை சந்தித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பின்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிக்க உள்ளனர்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி., மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் பாஜ.,வை எதிர்க்க உள்ளனர். அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., ஆட்சி நடக்கிறது. 

மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளை உருவாக்கும். இந்த சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனஉ மாயாவதி தெரிவித்துள்ளார். நாட்டின் நலன் கருதியே சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளது. சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் ஏற்கெனவே கூட்டணி அமைத்து போட்டியிட்டது உண்டு என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

சாமி குJan 12, 2019 - 04:10:30 PM | Posted IP 162.1*****

அது குப்பை அல்ல . ஓட்டு ...

சாமிJan 12, 2019 - 01:58:21 PM | Posted IP 162.1*****

குப்பைகள் ஒரே இடத்தில - கூட்டுவது சுலபம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory