» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை: அருண் ஜேட்லி

சனி 12, ஜனவரி 2019 5:34:31 PM (IST)

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

"மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.  ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வித வரியையும் உயர்த்தவில்லை. 

மறைமுக வரிகள், ஜிஎஸ்டி என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.  இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 97 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல் ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் கோடி வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory