» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு மசோதா : ஜனாதிபதி ஒப்புதல்

சனி 12, ஜனவரி 2019 7:36:11 PM (IST)

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஒப்புதல் வழங்கினார் .

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. நீண்ட விவாதத்திற்கு பின்னா் இந்த மசோதா நிறைவேறியது. அதைத் தொடர்ந்து கடும் அமளிக்கிடையே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இந்த இடஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜூ ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிா்ப்புத் தொிவித்தனர். கடும் அமளிகளுக்கிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 149 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory