» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: உச்சநீதிமன்றத்தில் கேரளா பதில்

திங்கள் 11, பிப்ரவரி 2019 5:40:26 PM (IST)

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்அனுமதி வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory