» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பலவீனமாக உள்ள பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது : தமிழக கூட்டணி குறித்து மாயாவதி கருத்து!!

புதன் 20, பிப்ரவரி 2019 5:33:11 PM (IST)

தமிழகத்தில் பலவீனமாக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக பல மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. பிஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் மதவாத அணுகுமுறையால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி. உத்தர பிரதேசதத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை பார்த்து பாஜக பயந்து போயுள்ளது.

இதனால் வேறு மாநிலங்களில் கூட்டணியை தேடி அக்கட்சி அலைகிறது. மகாராஷ்டிரா, பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இவர்களுக்கு வலிமை இல்லை என்பதை அவர்களே வெளிப்படுத்தி விட்டனர். எனவே தான் கூட்டணிக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கும் பாஜக வந்துள்ளது. இது பாஜகவின் பலவீனத்தையே காட்டுகிறது. இருப்பினும் பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது. அக்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என மாயாவதி கூறியுள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory