» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!

புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/nalini_chidambaram_1550665305.jpgகொல்கத்தாவைச் சேர்ந்த  சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ் மற்றும்  சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார். இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார். அத்துடன் இந்த வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் வழக்கறிஞராக ஆஜராக உள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory