» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்!!

வியாழன் 21, பிப்ரவரி 2019 4:15:26 PM (IST)

புல்வாமா தாக்குதலை அடுத்து ஜம்முவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் முழு அடைப்பு நடத்த தொழில் வர்த்தக சபை அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு போக்குவரத்து நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வக்கீல்கள் சங்கம், டீம் ஜம்மு அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.  காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு அவர்கள் கண்டன பேரணி நடத்தினர். அவர்கள் பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் என கோஷங்களை முழங்கினர்.

ஜம்முவின் பல பகுதிகளிலும் தேசியக்கொடிகளை அசைத்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. இளம் சிறுத்தைகள் அமைப்பினர் அதன் மாநில துணைத்தலைவர் பிரதாப் சிங் ஜம்வால் தலைமையில் கண்டன பேரணி நடத்தினர். அவர்கள் அங்கு தாவி பால சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். கோஷங்களை முழங்கியவாறு பாகிஸ்தான் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர். தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து, வன்முறை சம்பவங்கள் நடந்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் அடங்காதபோது, ஜம்மு நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஜம்முவில் நடந்த போராட்டங்களில் 3 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஜம்மு பிராந்தியம் வன்முறையால் போர்க்களமாக காட்சியளித்தது. ஜம்முவில் காஷ்மீர் பிராந்திய மக்கள் மீது தாக்குதல் முயற்சியும் நடைபெற்றது. இப்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் 11 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியை மேற்கொள்ளும்படி திட்டமிட்டப்படி பாதுகாப்பு படையினர் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory