» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தங்களது வாக்குப்பதிவு மையங்களில் தான் வாக்களிக்க முடியும். அப்போது பாஸ்போர்ட்டை காட்டித்தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory