» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்

வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்த அன்று பிரதமர் நரேந்திர மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற பிப்ரவரி 14ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் பூங்காவுக்கு பிரதமர் மோடி சென்றார்.

இந்த மாதத்தின் கடைசியில் வெளியாகவுள்ள ஆவணப்படம் ஒன்றில், இமயமலைக்குச் சென்றபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார். இதற்கான ஷூட்டிங் ஜிம் கார்பெட் பூங்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மோடியின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அங்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 7 மணிக்குச் சென்ற மோடி, மாலை வரை அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,”புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று மதியம், ஒட்டுமொத்த நாடே இறந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ, ஜிம் கார்பெட் பூங்காவில் மாலை வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த உலகத்தில் இதுபோன்ற பிரதமர் எங்காவது இருப்பார்களா? உண்மையில் எனக்கு இதுகுறித்துப் பேச வார்த்தைகளே இல்லை. நியாயமாக பார்த்தால் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

ஆனால், பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்தது வீரமரணமடைந்த வீரர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்” என்று குற்றஞ்சாட்டினார். எப்படித் தீவிரவாதிகளால் அவ்வளவு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளைக் கொண்டு வரமுடிந்தது?தாக்குதலுக்கு 48 மணி நேரம் முன்பாகவே ஜெய்ஷ்-இ-முகமது காணொலி மூலம் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது. ஏன் இத்ககைய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன? என்று ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

sankarFeb 22, 2019 - 06:45:24 PM | Posted IP 172.6*****

ராஜீவ் செத்தபோது ஒரு காங்கிரஸ்காரனும் பக்கத்துல இல்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory