» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி

சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீவிரமாக முயற்சி எடுப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஹரிஸ் ரவாத் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஹரிஸ் ரவாத் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. மத்தியில் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தொடர்ந்து காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.

நான் தெரிவிக்கின்ற இந்தக் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கவேண்டியதில்லை. இதுவே காங்கிரஸ் கட்சியின் கருத்தாகவும் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணிய சாமி விவாதம் ஒன்றில் பேசும் பொழுது, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் கட்சிதான் உண்மையில் முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.  புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை ஹரிஸ் ரவாத் கடுமையா குறை கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே உண்மையான தேசப்பற்று உடையவர் என்று பாரதீய ஜனதா கட்சி கூறிவருகிறது. இது உண்மை அல்ல.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் இந்தியாவில் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள்தான். இதேபோலத்தான் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் இருப்பதாக கருத வேண்டும். நம்முடைய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்வதற்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது, அவர்களை நினைவு கூர்கிறது, என்றும் ஹரிஸ் ரவாத் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory