» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்

சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

பெங்களூரில் நடக்கும் ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 முதல் 100 கார்கள் நாசமானதாகத் முதல்கட்டத் தகவலில் தெரிந்துள்ளது. 

பெங்களூரு நகரில் எலங்காவில் ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியைக் காண தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு அருகே திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 100 கார்கள் நாசகமானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புப் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory