» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கன் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது: ராகுல் காந்தி

வெள்ளி 15, மார்ச் 2019 5:55:13 PM (IST)

பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கன் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது என   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சோனியாவின் முன்னாள் அரசியல் செயலாளரும், காங்கிரஸ் தலைவருமான டாம் வடக்கன் பா.ஜனதாவில் இணைந்தார். கேரளாவின் திருச்சூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர், டாம் வடக்கன். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார். சோனியாவுக்கு மிக நெருக்கமாக இருந்த டாம் வடக்கன், அவரது அரசியல் செயலாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்த டாம் வடக்கன், திடீரென பா.ஜனதாவில் இணைந்தார். 

டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார். பின்னர் கட்சித்தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்படும் என தெரிகிறது. அதேநேரம் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறியது அந்த கட்சிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும் என கூறப்பட்டது. 20 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த வடக்கன் பா.ஜனதாவிற்கு தாவியது அதிர்ச்சியளிக்கும் நகர்வாக உள்ளது.

இந்நிலையில்,வடக்கன் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கன் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது என பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் வடக்கன் விலகல் தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்காத ராகுல் காந்தி, மோடி அரசுக்கு எதிராக மூன்று விஷயங்களை முன்னெடுக்கிறோம். மிகப்பெரிய பிரச்சினை வேலைவாய்ப்பின்மை, மோடியின் தோல்வி. இரண்டாவது பிரச்சினை ஊழல். ரபேல் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். மூன்றாவது விவகாரம் விவசாயிகள் பிரச்சினையென்று பதிலளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory