» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மம்தா மார்ஃபிங் புகைப்படம் வெளியிட்ட பாஜக பெண் தலைவருக்கு ஜாமீன்: மன்னிப்பு கேட்க உத்தரவு

செவ்வாய் 14, மே 2019 3:53:09 PM (IST)மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்ட பாஜக  இளைஞர் பேரவை தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்க இன்றுஉத்தரவிட்டது.

நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா செய்திருந்த மேக் அப், ஆடை அலங்காரம் ஆகியவை பெரும் விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அந்தப் புகைப்படத்தில் பிரியங்கா முகத்துக்குப் பதிலாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முகத்தை வைத்து மார்ஃபிங் செய்து, ஃபேஸ்புக்கில் பிரியங்கா சர்மா எனும் பெண் கடந்த 9-ம் தேதி வெளியிட்டார்.
 
ஹவுராவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா, பாஜகவின் இளைஞர் பேரவையின் தலைவராக இருந்து வருகிறார். முதல்வர் மம்தா பானர்ஜியை அவதூறு செய்யும் வகையில் புகைப்படம் வெளியிட்டது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் பிரியங்கா சர்மா மீது ஐபிசி 500, 66ஏ, 67ஏ ஆகிய பிரிவின் கீழும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு தொடர்ந்து கடந்த 10-ம் தேதி பிரியங்கா சர்மாவைக் கைது செய்தனர். பிரியங்கா சர்மாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க ஹவுரா உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. இதையடுத்து, பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரினர். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே. கவுல் ஆஜராகினார்.
 
இந்நிலையில், விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா பிறப்பித்த உத்தரவில், " பாஜக இளைஞர் அமைப்புத் தலைவர் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் வழங்குகிறோம்.  கருத்து சுதந்திரத்தில் யாரும் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதேசமயம்,  மற்றவர்களை பாதிக்கும்போது கருத்து சுதந்திரம் முடிந்துவிடுகிறது. 

பிரியங்கா சர்மா விடுவிக்கப்படும் போது, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு அவர் சிறையில் இருந்து செல்ல வேண்டும். மன்னிப்பு கேட்பதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா. பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம்" என உத்தரவிட்டனர். பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அசாம் மாநில அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர் பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory