» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி: இந்து அமைப்புகள் எதிர்ப்பு

வியாழன் 16, மே 2019 10:29:46 AM (IST)

சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயன்றனர். இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் அவர்கள் திரும்பினர். 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர். இந்த பரபரப்பு சில நாட்களாக அடங்கி அங்கு அமைதி நிலவியது.

இந்நிலையில் சபரிமலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த பெண்  உள்பட 2 பெண்கள் நேற்று நுழைய முயற்சி செய்தனர். ஆனால் அங்குள்ள பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும் தங்கள் முயற்சியை கைவிட்டு பாதியிலேயே திரும்பினர். இதனால் கோவில் வளாகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory