» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை: ஆர்டிஐ

வியாழன் 16, மே 2019 12:55:29 PM (IST)

நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி ஏதும் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது. 

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக சஞ்சய் தத்துக்கு எதிராகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சிறையில் நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே மகாராஷ்டிர அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி அவரை விடுவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் அரசியல் சாசன சட்டப்பிரிவு எண் 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது.  சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory