» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி

செவ்வாய் 21, மே 2019 12:09:46 PM (IST)

ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  இதுபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி  சார்பில் தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அமைதி ஊர்வலம் நடக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory