» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் பலி

செவ்வாய் 21, மே 2019 4:46:58 PM (IST)

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி  எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்று அனைவரும் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர்.   இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கோன்ஸா பகுதியில் இன்று மதியம் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் என்.பி.பி கட்சி  எம்.எல்.ஏ திராங் அபோ உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

என்.எஸ்.சி.என் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.   இந்த தாக்குதலுக்கு என்.பி.பி கட்சி தலைவரும், மேகாலயா மாநில முதல்வருமான கான்ராட் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்   அவர் வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory