» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 21, மே 2019 5:03:11 PM (IST)

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், விவிபாட் எந்திரங்களின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள்  மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச் சாவடிகளில்  ஒப்புகைச் சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory