» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முலாயம், அகிலேஷ் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஆதாரம் இல்லை: சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

செவ்வாய் 21, மே 2019 5:13:34 PM (IST)

சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம் சிங் மற்றும் அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முலாயம் சிங், அவரது மகன் அகிலேஷ் யாதவ். உத்தரபிரதேச முன்னாள் முதல்-அமைச்சர்களான அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதுர்வேதி என்பவர் 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர். 

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி 2007-ல் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் சிங் தரப்பில் 2012-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. இதற்கு முலாயம் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்கள் குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது எந்தவித முதன்மையான ஆதாரமும் கிடைக்க வில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முலாயம் சிங், அகிலேஷ் யாதவிடம் 2013 ஆண்டுக்கு பிறகு எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை. இவ்வாறு சி.பி.ஐ தான் தாக்கல் செய்த புதிய பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

சாமிமே 22, 2019 - 09:33:58 AM | Posted IP 172.6*****

கவுண்டமணி உதயகீதம் காமெடி நினைவு வருகிறது - "சின்ன உண்டியலா வச்சு கொஞ்சமா கொள்ளை அடிச்சா புடிச்சுருவாங்க - அதுவே பெரிய பெரிய உண்டியலா வச்சு பெருசா கொள்ளை அடிச்சா விட்டுருவாங்க"

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory