» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாட்டு சாணத்தால் காரை கவர் செய்த இளம்பெண் : கத்திரி வெயிலை சமாளிக்க புது ஐடியா

புதன் 22, மே 2019 11:56:42 AM (IST)மகாரஷ்டிரா மாநிலத்தில் கத்திரி வெயிலை சமாளிக்க இளம்பெண் ஒருவர், மாட்டு சாணியால் காரை முழுவதும் மொழுகி பயணம் மேற்கொள்கிறார். 

அடிக்கிற வெயிலின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ன செய்வது என்பது தெரியாமல் நாம் அனைவரும் திணறிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் மின்விசிறி போதவில்லை.  ஏசி, ஏர்கூலர் அறைகளில் இருந்து விட்டு, வெளியே வந்தால், ஏன் வெளியே வருகிறோம் எனும் எண்ணம் வந்து விடுகிறது. ஓரிடத்தில் வெளியில் 10 நிமிடம் கூட நிற்க முடிவதில்லை. உடலெங்கும் வியர்வை குளித்தது போன்ற பிம்பத்தையே உருவாக்கி விடுகிறது.  பைக்கில் பயணம் செய்தால் காற்று வரும் என நினைத்தால், பைக்கின் சீட் அடுப்பை போல் கொதிக்கிறது. வீசும் அனல் காற்றோ கண்களையே எரித்துவிடுவது போல இருக்கிறது. 

இந்த கொடுமையான வெயிலில் இருந்து விடுபட, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேஜல் ஷா, வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். ஷேஜல் தன்னுடைய கார் முழுவதும் மாட்டு சாணத்தால் மொழுகியுள்ளார். மாட்டு சாணத்தால் காரின் மேற்பரப்பை மூடும்போது காரின் உள்ளே வரும் வெப்ப காற்று கனிசமாக தடுக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும் காரில் பயணம் செய்யும்போது அனல் நம் மீது வீசாது. மேலும் காரின் சீட் சூடேறாமல் இருக்கும் என கூறியுள்ளார்.  நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதும், ஒரு காலத்தில் வீடுகளே சாணத்தால் மொழுகப்பட்டு கட்டப்பட்டிருந்ததற்கும் காரணம் என்ன என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory