» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தகாத உறவால் ஆசிரியர் பயிற்சி மாணவி எரித்து கொலை? சித்தப்பாவுக்கு போலீஸ் வலை

திங்கள் 27, மே 2019 5:24:14 PM (IST)

சித்தூர் அருகே சித்தப்பாவுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டம் புத்தூரை சேர்ந்தவர் குப்பையா. இவரது மனைவி முனிலட்சுமி.  இவர்களது மகள் பானுப்பிரியா(19). இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முனிலட்சுமி தனது மகள் பானுப்பிரியாவுடன் திருப்பதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ளார். பானுப்பிரியா அங்குள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பானுப்பிரியா உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.இதுகுறித்து புத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலம் அருகே ஒரு புத்தகம், ஒரு தண்ணீர் பாட்டில், பெட்ரோல் பாட்டில் இருந்தது.  அந்த நோட்டு புத்தகத்தில் பெண்ணின் முழு முகவரி இருந்தது. மேலும் அதில் தான் இறந்துவிட்டால் தங்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என செல் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார், பானுப்பிரியாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் புத்தூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பானுப்பிரியா படித்து வந்ததாகவும், இன்று தனது தோழிகளுடன் சென்று மூன்றாம் தேதி நடைபெறக்கூடிய தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற்று வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. 

பானுப்பிரியாவின் தாய் முனிலட்சுமி போலீசாரிடம் கூறுகையில் எனது தங்கை கணவரான நரேசுக்கும் பானுப்பிரியாவுக்கும் தொடர்பு இருந்தது. நரேஷ், பானுப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் அவர் சித்தப்பா முறை வருவதால் இதற்கு நானும், எனது உறவினர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இந்நிலையில் பானுப்பிரியா நரேஷிடம் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது அவர் உடல் எரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் நரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory