» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகளின் திருமண நிகழ்ச்சியில் பாடிய தந்தை மயங்கி விழுந்து மரணம்: கேரளாவில் சோகம்

செவ்வாய் 28, மே 2019 10:48:31 AM (IST)கேரளாவில்,  மகள் திருமண விழாவில் உற்சாகமாக பாடிக் கொண்டிருந்த தந்தை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தில் ஆழ்த்தியது.

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரின் இளைய மகள் ஆர்ச்சாவின் திருமணத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கச்சேரியில் விஷ்ணு பிரசாத்தும் ஒரு பாடலை உற்சாகமாக பாடினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மயக்கமடைந்து விழுந்தார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மறுநாள் திருமணம் என்பதால் தந்தை உயிரிழந்த தகவலை மகள் ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமலேயே உறவினர்கள் திருமணத்தை நடத்தினர். பின்னர் தந்தை இறந்ததை அறிந்த ஆர்ச்சா கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory