» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

செவ்வாய் 28, மே 2019 11:14:44 AM (IST)திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வசர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மாலையில் திருமலைக்கு சென்றார்.  பின்னர் அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் எடப்பாடி பழனிசா​மி​யை திருப்பதி தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய அவர் இன்று காலை அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று தரிசனம் செய்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, திருப்பதியில் இருந்து அவர் சென்னை புறப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory