» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? - தீர்ப்பாயத்தை அமைத்தது மத்திய அரசு

செவ்வாய் 28, மே 2019 3:22:21 PM (IST)

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி தீர்மானிக்க தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. 

சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory