» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி

செவ்வாய் 28, மே 2019 4:29:44 PM (IST)முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி.

மே 30ம் தேதி இந்தியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நரேந்திர மோடி, இன்று முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருசிறந்த ராஜதந்திரி என்று பாராட்டியிருக்கும் மோடி, இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நாட்டுக்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை அளித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory