» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாயாவதி கட்சித் தலைவர், மருமகன் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

புதன் 29, மே 2019 10:21:49 AM (IST)

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஹாஜி ஹசன் (55) மற்றும் அவரது மருமகன் ஷாடாப் (28) இருவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் (மாயவதி கட்சியின்) மூத்த தலைவர் ஹாஜி ஹசன் மற்றும் அவரது மருமகன் ஷாடாப் இருவரும் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் தங்கள் அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹாஜி ஹசனின் அலுவலகத்திற்கு வந்த 3 மர்ம நபர்களில் ஒருவர் வெளியே நிற்க மற்ற 2 பேர் இனிப்பு டப்பாவில் துப்பாக்கியை மறைத்து வைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் டப்பாவில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஹாஜி ஹசனை சுட்டுக் கொன்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற அவரது மருமகன் ஷாடாபையும் அவர்கள் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உத்தரபிதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

சொந்த பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கொலையாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி நஜிபாபாத் மகேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின் உத்தரபிரதேசத்தில் நடக்கும் மூன்றாவது அரசியல் கொலை இது. முதலில் மே 25ம்தேதி அமேதி தொகுதி எம்.பி. ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின் நேற்று சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கமலேஷ் பால்மிகி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக உத்தர பிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory