» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு: ராகுல் காந்தி வாழ்த்து

வியாழன் 30, மே 2019 4:07:03 PM (IST)ஆந்திர மாநில முதல்வராக இன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்  151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்றுகாலை விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆந்திர முதல்வராக பதவிஏற்றுக் கொண்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மற்றும் ஆந்திர மாநிலம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory