» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா் மோடி : உலக தலைவர்கள் பங்கேற்பு
வியாழன் 30, மே 2019 7:47:34 PM (IST)

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.
மக்களவைத் தோ்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் மத்திய அமைச்சா்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிா்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமா், ரவிஷங்கா் பிரசாத், ஹா்சிம்ரத் பாதல் (அகாலி தள்), தாவா்சந்த் கெலோட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான சுப்ரமணியம் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் மத்திய அமைச்சா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் உலக தலைவர்களான கிரிகிஸ்தான் அதிபா் ஜின்பேகோவ், நேபாள பிரதமா் ஷா்மா ஒலி, பூடான் பிரதமா் லோடே ஷெரிங், தாய்லாந்தின் சிறப்பு தூதா் கிரிசாடா பூன்ராச்சு, மொரிஷியஸ் பிரதமா் பிரவீந்த் குமாா் ஜெகநாத், மியான்மா் அதிபா் யூ வின் மின்ட், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டாா். காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் : உச்ச நீதிமன்றம்
வியாழன் 5, டிசம்பர் 2019 4:07:06 PM (IST)

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வியாழன் 5, டிசம்பர் 2019 3:48:00 PM (IST)

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
வியாழன் 5, டிசம்பர் 2019 11:01:43 AM (IST)

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: நிா்மலா சீதாராமன் தகவல்
வியாழன் 5, டிசம்பர் 2019 9:58:55 AM (IST)

தமிழ்நாட்டிற்கு ரூ.7,825 கோடி நிதியை விடுவிக்க கோரிக்கை : பிரதமருடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு
வியாழன் 5, டிசம்பர் 2019 8:20:48 AM (IST)

ப. சிதம்பரம் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
புதன் 4, டிசம்பர் 2019 8:29:36 PM (IST)
