» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி அமைச்சரவையில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு முக்கியத்துவம்: 10பேருக்கு அமைச்சர் பதவி!!

வெள்ளி 31, மே 2019 12:37:12 PM (IST)மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்பிக்களுக்கே அதிகளவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது பாஜக. இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முறைப்படி ஆட்சி உரிமையை பெற்றது அந்தக்கட்சி. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவியேற்றது. மோடியின் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 

கேபினட் அமைச்சர்கள்

1. நரேந்திர மோடி
2. ராஜ்நாத் சிங்
3. அமித் ஷா
4. நிதின் கட்கரி
5. சதானந்த கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம்விலாஸ் பஸ்வான்
8. நரேந்திரசிங் தோமர்
9. ரவிசங்கர் பிரசாத் 
10. ஹர்சிம்ரத்கௌல் பாதல்
11. தவார்சந்த் கெஹ்லாட்
12. சுப்ரமண்யம் ஜெய்சங்கர் 
13. ரமேஷ் போஹ்ரியால் 
14. அர்ஜுன் முண்டா
15. ஸ்மிருதி இரானி
16. ஹர்ஷ்வர்தன் 
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஷ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20. முக்தர் அப்பாஸ் நக்வி
21. பிரகலாத் ஜோஷி
22. மகேந்திரநாத் பாண்டே
23. அர்விந்த் கண்பத் சவாந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திரசிங் ஷெகாவத்

அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. சந்தோஷ்குமார் கெங்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபாட் யசோ நாயக் 
4. ஜிதேந்திர சிங்
5. கிரண் ரிஜிஜூ
6. பிரகலாத் சிங் படேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் எல். மாண்ட்வியா

இணையமைச்சர்கள்

1. ஃபாகன்சிங் குலாஸ்தே
2. அஷ்வினிகுமார் சௌபே
3. அர்ஜூன்ராம் மெஹ்வால்
4. வி.கே.சிங்
5. கிருஷ்ணன் பால்
6. தான்வே ராவ்சஹேப் தாதாராவ்
7. கிருஷ்ணன் ரெட்டி 
8. புருஷோத்தம் ராம்பாலா
9.  ராம்தாஸ் அத்வாலே
10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
11. பபுல் சுப்ரியோ
12. சஞ்சீவ்குமார் பல்யான்
13. சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே 
14. அனுராக்சிங் தாகுர்
15. சுரேஷ் சன்னப்பசப்ப அங்காடி 
16. நித்யானந்த் ராய்
17. ரத்தன்லால் கட்டாரியா
18. வி.முரளீதரன்
19. ரேணுகாசிங் சாருதா
20. சோம் பிரகாஷ்
21. ரமேஷ்வர் டோலி
22. பிரதாப் சந்திர சாரங்கி
23. கைலாஷ் சௌத்ரி
24. தீபாஸ்ரீ சௌத்ரி

மத்திய அமைச்சரவையில் அதிக அமைச்சர்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் மாநிலம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதை நினைவு கூற தக்கது. மோடி சர்க்கார் 2 மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அதிகளவாக 10 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மத்திய அமைச்சரவையில் 7 இடங்களைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவையில் 6 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தலா 3 இடங்கள் மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளன.

மேற்குவங்கம், ஒடிசா, மத்தியப்பிரதேசத்திற்கு தலா 2 இடங்கள் மத்திய அமைச்சரவையில் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மொத்த தொகுதிகளையும் பாஜகவுக்கே வாரி வழங்கின. இந்த மாநிலங்களில் வேறு எந்த கட்சிகளும் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மேற்குவங்கம் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 18 இடங்களை கொடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இருந்து பாபுல் சுப்ரியோ, தேவஸ்ரீ சவுத்ரி ஆகிய இரண்டு பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஒடிசாவில் 8 இடங்களை கைப்பற்றிய பாஜக அம்மாநிலத்திற்கு தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகிய 2 அமைச்சர்களை வழங்கியுள்ளது. இதில் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபா உறுப்பினர் ஆவார்.  புதிய அமைச்சரவையில் ஆந்திரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்த், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் 10 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடியையும் தவிர்த்து ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, மகேந்திரநாத் பாண்டே, சஞ்ஜீவ் பாண்டே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, விகே சிங், சந்தோஷ் கங்வார், ஹர்தீப் சிங் புரி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் ஆவர். உத்தரப்பிரதேசத்தில் பாஜக இம்முறை 62 தொகுதிகளில் வெற்றி பெற்று எம்பிக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் இருந்து நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், அரவிந்த் சாவந்த், தன்வே பாட்டீல், ராம்தாஸ் அத்வாலே மற்றும் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ராம்விலாஸ் பஸ்வான், ரவி சங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், ஆர்கே சிங், அஸ்வினிகுமார் சவுபே, நித்தியானந்த் ராய் ஆகியார் பதவியேற்றுள்ளனர். நாடாளுமன்றத்திற்கு அதிக எம்பிக்களை கொடுக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலில் உள்ளது உத்தரப்பிரதேசம், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா 48 எம்பிக்களையும் பீகார் 40 எம்பிக்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory