» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதிய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு: நிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

வெள்ளி 31, மே 2019 3:44:53 PM (IST)

மத்திய நிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன், தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் ஆன முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்சங்கருக்கு வெளியுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மோடியின் முதல் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார் நிர்மலா. மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு, முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் இந்திரா காந்திக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என இன்னொரு வரலாறு படைத்துள்ளார் நிர்மலா சீதாராமன். மேலும், தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் ஆன முதல் பெண் என்பது கூடுதல் சிறப்பாக மாறியுள்ளது. நிர்மலா சீதாராமன் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கும் 6வது தலைவர் ஆவார். இதற்கு முன்பு ஆர்.கே.சண்முகம் செட்டியார், டிடி கிருஷ்ணமாச்சாரியார், சி.சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் நிதியமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளனர்.

அமைச்சர்களுக்கான துறைகளின் விவரம்  பின்வருமாறு:

 ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை 

பியூஷ் கோயல் - ரயில்வே துறை

சதானந்த கவுடா - ரசாயனம், உரத்துறை

நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை

ஸ்மிருதி இரானி - மகளிர் நலத்துறை

ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல், மின்னணு தொழிற்துறை

பிரகாஷ் ஜவ்டேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்பு

டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை

நரேந்திர சிங் தோமர் - விவசாய துறை அமைச்சர்

முக்தார் அபாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

இத்துடன், மத்திய இணை அமைச்சர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மக்கள் கருத்து

samiJun 1, 2019 - 01:34:39 PM | Posted IP 162.1*****

கீதா ஜீவனுக்கு திறமை இல்லையா - கனிமொழி முன்னிலைப்படுத்த படுகிறார்

பாலாJun 1, 2019 - 10:22:36 AM | Posted IP 108.1*****

அப்போ தமிழிசைக்கு திறமை இல்லனு சொல்றேளா Mr. சாமி..

சாமிமே 31, 2019 - 05:49:49 PM | Posted IP 162.1*****

திறமைக்கு முன்னுரிமை எப்போதுமே உண்டு - வயிற்றிச்சல் வருவது இயற்கையே

பாலாமே 31, 2019 - 04:42:33 PM | Posted IP 162.1*****

அவாவுக்கு எப்போவுமே முன்னுரிமை.. இந்தம்மா தேர்தல்ல நின்னு ஜெயிச்சி வாங்குன மாதிரி போஸ் வேற ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory