» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கங்கை நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல : மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

வெள்ளி 31, மே 2019 5:40:58 PM (IST)"நோய் பரப்பும் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதால் கங்கை நதி நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல" என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் ஜீவ நதிகளில் ஒன்றாக கங்கை நதி விளங்குகிறது. இந்த புணித நதியில் குளிப்பதால் பாவங்கள் அனைத்தும் விலகுவதாக தொன்றுதொட்டு சொல்லப்பட்டு  வருகின்றது. கங்கை நீரின் தன்மையைக் குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில்.. உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் கங்கை நீர் ஓடுகிறது. சி.பி.சி.பீ(CPCB) சமீபத்தில் நடத்திய ஆய்வில் கங்கை நீரில் நோய் பரப்பும் ஒருவித  நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல எனக் கூறியுள்ளது. கங்கை ஆற்றங்கரையில் 86 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 

அதில் வெறும் 7 இடங்களில் மட்டும் சுத்திகரிப்புக்குப் பின் குடிக்கப் பயன்படுத்தவும், 18 இடங்களில் குளிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மற்ற இடங்களில் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ பயன்படுத்த முடியாத அளவிற்கு  நுண்கிருமிகள் பரவி இருக்கின்றது. கங்கை நீர் மாசடைவதைத் தடுக்க பசுமை தீர்ப்பாயம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கங்கை தூய்மை பணியில் மத்திய நீர்வளத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்காக "நமாமி  கங்கா" என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. 

ஒரு காலத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து ஏற்படும் கழிவுகள் கங்கை நீரில் நேரடியாகக் கலந்துவந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள கங்கை நீர்  ரசாயனம் மிகுந்து கருப்பாகத் தோற்றமளித்தது. ஆனால், நமாமி திட்டத்தைக் கொண்டுவந்த பின், தொழிற்சாலை கழிவுகள் நேரடியாகக் கலப்பதை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறைச் செயலர் மிஸ்ரா கூறியுள்ளார்.  கங்கை தூய்மை பணியில் மகிழ்ச்சியடையும் அளவுக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தூய்மைப்படுத்து பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டும் கங்கை நீரைத் தூய்மைப்படுத்த முடியாது. இதில் மக்களின் பங்கு மகத்தானது என்று அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

ஆசீர். விJun 1, 2019 - 09:52:34 AM | Posted IP 173.2*****

கங்கையை சுத்தப்படுத்துவோம் படகு விடுவோம் என்று பீலா விட்ட மோடியும் கட்கரியும் உமா பாரதியும் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்

ஒருவன்மே 31, 2019 - 06:43:46 PM | Posted IP 108.1*****

கங்கையை சுத்தப்படுத்துவோம் , நதிநீரை இணைப்போம் எல்லாம் பூரா பிஜேபி யின் களவாணிப்பைய..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory