» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லீம்கள் அச்சப்பட தேவையில்லை: ஓவைசி

சனி 1, ஜூன் 2019 10:58:33 AM (IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லீம்கள் அச்சப்பட தேவையில்லை என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லீம்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்தார். ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து 4  வது முறையாக வெற்றி பெற்றுள்ள ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது ஓவைசி கூறியதாவது:   " மோடியால் கோவிலுக்கு சென்று வழிபட முடியுமென்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம்.  மோடியால் குகைக்குள் போய் அமர முடியுமென்றால், முஸ்லீம்களாகிய நாம், பெருமையுடன் மசூதிகளில் தொழுகை நடத்தலாம். 300 இடங்களில் வெற்றி பெற்று பெறுவது மிகப்பெரிய விவகாரம் இல்லை. ஏனெனில், இந்தியா அரசியலமைப்பில் வாழ்கிறது.  300 தொகுதிகளில் வென்று விட்டதால் மட்டுமே அவர்களால் (பாரதீய ஜனதா) நமது உரிமைகளை பறித்து விட முடியாது” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory