» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்மிருதி இரானி உதவியாளர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

சனி 1, ஜூன் 2019 12:09:02 PM (IST)

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உதவியாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திர சிங், 25-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ராமச்சந்திரா, தர்மாநாத், நசீம், கோலு உள்ளிட்ட 5 பேரை 27-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான வாசிம், உத்தரப்பிரதேசத்தின் ஷல்ஹபூர் எனுமிடத்தில் நேற்று இரவு போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory