» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

சனி 1, ஜூன் 2019 5:49:48 PM (IST)

17ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 17 முதல் ஜூலை 26 வரை நடைபெறவுள்ளது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 

17ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிந்து மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். மோடியுடன் சேர்த்து 58 அமைச்சர்கள் மே 30ஆம் தேதி பொறுப்பேற்றனர். இதையடுத்து முதல் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17 முதல் ஜூலை 26 வரையிலான 40 நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

17, 18 ஆகிய இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். இதையடுத்து 19ஆம் தேதி இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூன் 19ஆம் தேதியே புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ஆம் தேதி 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும் இக்கூட்டத்தொடரில் நடைபெறுகிறது.

நேற்று (மே 31) நடந்த கேபினட் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 4ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது” என்றார். நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, உடல்நலக் குறைவு காரணமாக தற்போதைய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இந்திரா காந்தியை அடுத்து நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory