» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்பு

ஞாயிறு 2, ஜூன் 2019 10:00:23 AM (IST)மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா தலைநகர் டில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில்  முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 352 இடங்களை பிடித்து மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 30ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இவருடன், 57 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சர்கள் இலாக்காக்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி, பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, அமைச்சரவையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். அவருக்கு மத்திய உள்துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு அமித் ஷா இன்று காலை வந்தார். அவரை உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட மூத்த அலுவலக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அமித் ஷா முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன், உள்துறை இணை அமைச்சர்களான ஜி.கே.ரெட்டி மற்றும் நித்தியானந்தா ராய் ஆகியோரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory