» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானா மாநில உதய தினம்: பிரதமர் மோடி, ‍ காங்கிரஸ் தலைவர் ராகுல் வாழ்த்து

ஞாயிறு 2, ஜூன் 2019 5:48:52 PM (IST)

தெலங்கானா தனிமாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஒன்றுபட்ட ஆந்திரா பிரிவுக்குப் பின்னர் ஜூன் 2-ஆம் தேதி தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த உதய தினம் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள் தெலங்கானா மக்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் தெலங்கானா மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தெலங்கானாவின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டார்.

ராகுல்காந்தி வாழ்த்து

தெலங்கானா உதயமான நாளான இன்று அனைவருக்கும் வாழ்த்துக்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் உதயமான நாளில் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள், ஜெய் தெலங்கானா என காங்கிரஸ் கட்சி சார்பில் டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா   உருவான வரலாறு

ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் தலைநகர் ஹைதராபாத்தில் உற்சாக கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் அரை நூற்றாண்டு கனவாக இருந்தது. 

2001–ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன் வைத்து கே.சி. சந்திரசேகரராவ், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. நீண்ட இழுபறிக்குப் பின்னர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவானது.  இது நாட்டின் 29–வது மாநிலமாகும்.தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவி வகித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory