» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் படிப்படியாக மது விலக்கு: முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை

ஞாயிறு 2, ஜூன் 2019 5:51:55 PM (IST)

ஆந்திர மாநிலத்தில் மது விலக்கை படிப்படியாக கொண்டுவருவது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். நிதி நிலமை குறித்து அறிக்கையும் கேட்டுள்ளார். அப்போது மாநிலத்தின் நிதி நிலைமையை முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அனுமதியில்லாமல் இயங்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், லைசென்ஸ்களை ரத்துசெய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் தேர்தல் வாக்குறுதியில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

mmmmJun 5, 2019 - 03:05:53 PM | Posted IP 162.1*****

tamilnadu?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory