» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய விமானப்படை விமானம் மாயம்: 13பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

திங்கள் 3, ஜூன் 2019 5:37:39 PM (IST)

அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப் படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமானத்தை தேடும் பணியை தொடங்கினர். சுகோய்-30 மற்றும் சி130 சிறப்பு விமானம் ஆகியவற்றில் சென்று தேடும் பணி நடைபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory