» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்ஸிஜன் சிலிண்டர் உதவியோடு சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய கேரள இளம்பெண்

திங்கள் 3, ஜூன் 2019 5:57:04 PM (IST)எலும்பு குறைபாடு நோயுடைய கேரளாவைச் சேர்ந்த லதீஷா என்ற 24 வயது  இளம்பெண், அக்ஸிஜன் சிலிண்டர் உதவியோடு சிவில் சர்வீஸ் தேர்வெழுதியுள்ளார். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களில் கேரளாவைச் சேர்ந்த லதீஷா அன்சாரியும் ஒருவர். எலும்பு குறைபாட்டு நோய் மற்றும் வெளியில் இருந்து ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நிலையில் இருந்த 24 வயது லதீஷாவுக்கு சிவில் சர்வீஸ் தேர்வெழுத இந்த விஷயங்கள் எதுவுமே தடையாக இல்லை.

சக்கர நாற்காலியில், பின்னால் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வந்தார் லதீஷா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த தேர்வுக்காக தான் தயாராகி வந்துள்ளதாகவும் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். எம்.காம். படித்திருக்கும் லதீஷாவின் மருத்துவச் செலவுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் செலவாவதாகவும் அவரது தந்தை கூறுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory