» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பதிவு- பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

செவ்வாய் 4, ஜூன் 2019 11:16:30 AM (IST)



மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியை மராட்டிய மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது.

மும்பை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் நிதி சவுத்ரி. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்டு இருந்தார். "உலகம் முழுவதும் காந்தி சிலைகளை அகற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை அகற்ற வேண்டும். 30.1.1948 சம்பவத்துக்காக கோட்சேவுக்கு நன்றி” என்று அவர் பதிவில் கூறியிருந்தார். 

இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், நிதி சவுத்ரியை மராட்டிய மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது. அவர் குடிநீர் வழங்கல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory