» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிபா வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்: கேரள மக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்

செவ்வாய் 4, ஜூன் 2019 12:50:38 PM (IST)

நிபா வைரஸ் குறித்து யாரும் பதற்றம் அடைய வேண்டாம். அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற வந்த ஒரு கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது மருத்துவ சோதனை அறிக்கை புணேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அதன் முடிவுகள் தெரிந்தப்பிறகே இதனை உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் கேரள அரசு நேற்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

மேலும், நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா திருவனந்தபுரத்தில் கூறுகையில், 23 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிபா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி காணப்பட்டதால், புணேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்துக்கு இறுதி முடிவுகளை பெறுவதற்காக அந்த அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைத்தப் பிறகே, இதுகுறித்து உறுதியாக கூற முடியும். 

அதுவரையிலும், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு கொச்சியில் உள்ள கலமச்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். புணேயிலிருந்து, மருத்துவ முடிவுகள் வரும் வரை காத்திருக்கப் போவதாகவும், அதன்பிறகே மாநிலம் முழுவதும் இதுதொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory