» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தின் கழிவறை டைல்ஸ்களில் தமிழக அரசு சின்னம்: உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!!

புதன் 5, ஜூன் 2019 5:25:20 PM (IST)உத்தரபிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளில் தமிழக அரசு சின்னத்துடன் கூடிய டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் புலன்ஷர் பகுதியில் உள்ள இச்சாவாரி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமீபத்தில் கழிவறைகள் கட்டப்பட்டது.  இந்த கழிவறைகளின் சுவர்களில் தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தி புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளன. இதனை அறிந்ததும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் டைல்ஸ்களை உடனடியாக அகற்றியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி சதோஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சின்னம் கொண்ட டைல்ஸ்கள் உத்தரப் பிரதேசம் வரை சென்றது எப்படி என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory