» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான குழு: மத்திய அரசு உத்தரவு

வியாழன் 6, ஜூன் 2019 11:01:11 AM (IST)

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 8 அமைச்சரவை குழுக்களை மாற்றி அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

17-வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை (மே 30) பதவியேற்றார். பிரதமரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் என 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்நிலையில், 8 அமைச்சரவை குழுக்களவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அமைச்சரவையில் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், நாடாளுமன்ற விவகாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட அமைச்சரவை குழுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அமைச்சரவை குழு என 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றுள்ளார்.

5 உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டுக்கான குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.   10 பேர் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory