» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும்: ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ

வியாழன் 6, ஜூன் 2019 3:47:26 PM (IST)

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்துள்ளது ஆர்பிஐ. இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6 சதவீதத்தில் இருந்து குறைந்து 5.75 சதவீதமாக இருக்கும். இதன் அடிப்படையில், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்றுநடைபெற்றது. 

இதில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதே போல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவீதத்தில் இருந்து குறைத்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி 7.2 ஆக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்ட நிலையில் அதை 7 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி. 2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் 3-3.1% ஆக இருந்த நிலையில், இது அடுத்த பாதியில் 2-6% ஆக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்துள்ளதன் மூலம், தொழில்முனைவோர், சிறு தொழில்புரிவோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory