» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: 11ஆண்டுகளில் முதல் முறையாக பிரக்யா நீதிமன்றத்தில் ஆஜர்!!

வெள்ளி 7, ஜூன் 2019 4:08:22 PM (IST)

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் போபால் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் இன்று ஆஜரானார்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
 
வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற பிரக்யா சிங்கின் கோரிக்கையை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. மேலும் ஜூன் 6-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதனிடையே ரத்த அழுத்தம் காரணமாக மே 5-ம் தேதி இரவு பிரக்யா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ஒருநாள் விலக்கு அளிக்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது பாஜக எம்பியாக உள்ள பிரக்யா சிங், வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு பிரக்யா சிங் இன்று முதன்முதலாக ஆஜரானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory