» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகையின் கார் மீது கான்கிரீட் ஸ்லாப் விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்!!

வெள்ளி 7, ஜூன் 2019 4:48:59 PM (IST)



மலையாள நடிகை அர்ச்சனா கவி சென்ற கார் மீது மெட்ரோ ரெயில் பாலத்தில் இருந்து ஒரு கான்கிரீட் ஸ்லாப் விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கவி கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது கொச்சி மெட்ரோ ரெயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப் (கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதில் அர்ச்சனா கவி சென்ற கார் சேதமடைந்தது. நல்ல வேளையாக அவருக்கோ, டிரைவருக்கோ எதுவும் ஆகவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் அர்ச்சனா கவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் புகார் செய்தார்.
 
இந்த விபத்து குறித்து அர்ச்சனா கவி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். நாங்கள் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு கான்கிரீட் ஸ்லாப் எங்கள் கார் மீது விழுந்தது. கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி டிரைவருக்கு உரிய இழப்பீட்டை வழங்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



அர்ச்சனா கவியின் ட்வீட்டை பார்த்த கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, சம்பவம் குறித்து தகவல் அறிய டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இந்த விவகாரம் குறித்து எங்கள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. அசவுகரியத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலை பார்த்த நெட்டிசன்கள், இது அசவுகரியம் இல்லை, பாதுகாப்பு விஷயம். கார் மீது விழுந்த கான்கிரீட் ஸ்லாப் அந்த வழியாக இருசக்கர வாகனத்திலோ, நடந்து சென்றவர்கள் மீதோ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory