» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு : முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு!!

வெள்ளி 7, ஜூன் 2019 5:14:12 PM (IST)

ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு செய்துள்ளார். 

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அமராவதியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் இன்று  நடைபெற்றது. இதில் 25 பேரை கொண்ட அமைச்சரவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் விதமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிற்பட்ட சமூகத்தினர் சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகியவற்றுக்கு 5 துணை முதல்வர்கள் பதவி வழங்கப்படுகிறது. நாளை நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பதவியேற்பு நடைபெறுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் ஆஷா ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை 7,000 ரூபாய் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் இனி 10,000 ரூபாய் ஊதியம் பெற உள்ளனர். இதுமட்டுமின்றி படிப்படியாக மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்களையும் அவர் செயல்படுத்தவுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory