» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம்: பலத்த பாதுகாப்பு

சனி 8, ஜூன் 2019 10:22:51 AM (IST)

கேரளாவில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரளா வந்தார். சிறப்பு விமானம் மூலம் கொச்சி கடற்படை தளத்தில் வந்திறங்கிய மோடி, எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று (சனிக்கிழமை) காலை கொச்சி கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்.

அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு பிற்பகலில் டெல்லி புறப்பட்டு செல்வார் என தெரிகிறது. முன்னதாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று கேரளா வந்தார். இதற்காக நேற்று பிற்பகல் கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கிய அவர் கார் மூலம் வயநாட்டுக்கு புறப்பட்டார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அந்த தொகுதியிலேயே தங்கியிருக்கும் ராகுல் காந்தி, சுமார் 15 வரவேற்பு கூட்டங்களில் பங்கேற்கிறார். பின்னர் நாளை பிற்பகல் 2 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

yuuhJun 8, 2019 - 12:29:13 PM | Posted IP 108.1*****

k

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory