» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக 2 வயது பெண் குழந்தை கடத்தி கொலை: உத்தரபிரதேசத்தில் கொடூரம்!!

சனி 8, ஜூன் 2019 12:19:26 PM (IST)

உத்தரபிரதேசத்தில் பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக 2 வயது பெண் குழந்தையை கடத்தி கொடூரமாக கொன்ற குற்றவாகளிகுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என  அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு ட்விங்கிள் எனும் 2 வயது பெண் குழந்தை இருந்தது. கடந்த தம் 31-ம் தேதி குழந்தை ட்விங்கிள் திடீரென காணாமல் போயுள்ளார். குழந்தையின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் டவிங்கிள் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு பன்வாரிலால் வீடு அருகே குப்பை தொட்டியில் ட்விங்கிள் சடலமாக மீட்கப்பட்டார். குழந்தை ட்விங்கிள் கண் தோண்டப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 

தகவல் அறிந்து வந்த போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை கொல்லப்பட்டதற்கான காரணத்தை விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல் வெளி வந்துள்ளது. பன்வாரிலால் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 30 ஆயிரம் ரூபாயை திரும்ப கொடுத்துவிட்டார். பாக்கி பணம் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இதனால் கடன் கொடுத்த கும்பல் குழந்தையை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஷாகித் மற்றும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து குழந்தைக்கு ஆதரவாக அலிகாரில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory