» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்பு : ரோஜா சபாநாயகராக வாய்ப்பு?

சனி 8, ஜூன் 2019 4:05:09 PM (IST)ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான  அரசு பதவியேற்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடிகை ரோஜாவுக்கு சபாநாயகராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.. கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார். எனினும், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. ஒரு வாரமாக அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் அளிக்கலாம் என்பது குறித்து முக்கிய தலைவர்களுடன் ஜெகன் ஆலோசித்து வந்தார்.

இந்நிலையில், ஜெகனின் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம் ஆகிய சமூகத்தில் இருந்து ஒருவர் என்று 5 பேர் துணை முதல்வர்களாக இடம் பெற உள்ளனர். 5 துணை முதல்வர்கள் இன்று பதவியேற்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  

சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும் ஜெகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நகரி தொகுதியில் வெற்றி பெற்ற  நடிகை ரோஜா அமைச்சராவார் என கூறபட்டது. ஆனால் அவர் அமைச்சராக பதவி ஏற்கவில்லை அதனால் அவருக்கு சபாநாயகராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் வரிசையில் நின்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory